பெண் குழந்தைக்கு தந்தையான யோகி பாபு!! – ரசிகர்கள் வாழ்த்து..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் கோலமாவு கோகிலா, ஜாம்பி மற்றும் மண்டோலா போன்ற படங்களில் கதாநயகனாக நடித்தார்.

அதே சமயம் அடுத்த பட வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோலிவிட்டில் கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் நடித்த இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

வேற லெவல்! கெத்து காட்டும் விக்ரமின் தங்கலான்… வைரலாகும் வீடியோ!!

இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது. அதோடு யோகிபாபுவுக்கு விசாகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தீபாவளி தினத்தில் யோகிபாபு – பார்கவி தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.