உத்தரப்பிரதேசத்தை கேரளாவோடு ஒப்பிட்டுப் பேசிய யோகி ஆதித்யநாத்! தக்க பதிலடி கொடுத்த கேரள முதல்வர்!!

இன்றைய தினம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 58 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  முன்பாக உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்தது. அதில் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்தார்.

பொதுவாக இந்தியாவில் சர்ச்சைக்குரிய மாநிலமாக காணப்படுவது உத்தரபிரதேசம் தான். ஏனென்றால் அங்கு அதிக அளவு அசம்பாவிதங்கள் போராட்டங்கள் நடைபெறும். அதோடு மட்டுமில்லாமல் யோகி ஆதித்யநாத் கருத்தும் பெரும் சலசலப்பை உண்டாக்கும்.

அந்த வகையில் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தை கேரளா போல மாற்றி விடாதீர்கள் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த கேரள முதலமைச்சர் தக்க பதிலை அளித்துள்ளார். அந்த படி காஷ்மீர், கேரளாவைப் போல் உத்தரப்பிரதேசத்தை மாற்றி விடாதீர்கள் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருந்தார்.

உத்தரப்பிரதேசம் கேரளா போல மாறினால் மக்களுக்கு சிறந்த கல்வி, மருத்துவம், சமூக நலன்கள் கிடைக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். கேரளா போல் உத்தரப்பிரதேச மாநிலம் மாறினால் ஜாதி, மதத்தால் மக்கள் கொல்லப்படாமல் நல்லிணக்கமான மாநிலமாக மாறும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment