1982ம் ஆண்டு வெளிவந்த படம் பரிட்சைக்கு நேரமாச்சு. இந்த படம் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வந்த படம். இப்படம் பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படத்தில் ஒய்.ஜி மகேந்திரன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஒய்ஜிமகேந்திரன் ஒரு பிராமண குடும்பத்தில் சிவாஜிக்கு மகனாக பிறந்திருப்பார். அப்பாவியான ஒய்.ஜி மகேந்திரன் இறந்து விடுவார் அவரின் பிரிவை தாங்க முடியாத துயரத்தில் இருக்கும் தந்தை சிவாஜிக்கு அவரைப்போல தோற்றம் கொண்ட முரட்டுத்தனமான ஒய்.ஜி மகேந்திரன் கண்ணில் சிக்குவார்.
மகன் வரதுக்குட்டி இறக்கவில்லை என தன் மனைவியிடம் மறைத்து முரடன் ஒய்.ஜி மகேந்திரனை வரதுக்குட்டியாக நடிக்க வைத்து தன் மனைவியை ஏமாற்றுவார்.
உணர்வுபூர்வமான இக்கதையில் தற்காலத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என ஒய்.ஜி மகேந்திரன் கருத்து கூறியுள்ளார்.