நேற்று காரசார விவாதம்; இன்று எதிர்க்கட்சிக்கு நன்றி! ஆதிதிராவிடர் நல அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்!!: ஸ்டாலின்

நேற்றைய தினம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியினர் அதிமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நிகழ்ந்தது. அதில் குறிப்பாக அதில் குறிப்பாக அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டது குறித்து இரு கட்சிக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நிகழ்ந்தன.

இந்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக கட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. அதன்படி திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியான அதிமுக பாராட்டியதற்கு நன்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு போராட்டத்திற்கு அதிமுக ஒத்துழைப்பும் என்ற அறிவித்தமைக்கும் நன்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதோடு ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாட்டதத்தைப் போக்கும் வகையில் நூல் விலையை குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சிறு, குறு விவசாயிகள் என அனைத்து வேளாண் பெருங்குடி மக்களின் நலன்களை தமது அரசு பாதுகாக்கும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment