Connect with us

நேற்று மாலை ரயில் விபத்து-ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

Chennai local 14003 1

செய்திகள்

நேற்று மாலை ரயில் விபத்து-ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

நேற்று மாலை ரயில் விபத்து-ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

நேற்று மாலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு நடைபாதையின் மீது ஏறி நின்றது . இதனால் நடைமேடையில் இருந்து மேற்கூரை மற்றும் இரண்டு கடைகள் உள்ளிட்டவை பெரும் சேதமடைந்தது.

அதோடு மட்டுமல்லாமல் ரயில் ஓட்டுனர் கீழே குதித்து ஓடி வந்து அங்குள்ளோருக்கு எச்சரிக்கை விடுத்தார். எனவே அங்கு எந்த ஒரு உயிர் சேதமும் நிகழவில்லை.

இந்த நிலையில் ரயில் விபத்து தொடர்பாக ஓட்டுனர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா அளித்த புகாரின் பேரில் எழும்பூர் ரயில்வே போலீசார் இவ்வாறு வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 ரயில்வே சட்டம் பிரிவு 151 மற்றும் 154 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top