News
அர்த்தமே இல்லாமல் போன முழு லாக்டவுன்: விடிய விடிய இறைச்சி கடைகளில் கூட்டம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இறைச்சி கடைகள் உள்பட ஒரு சில கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதால் முழுலாக்டவுன் தமிழக அரசால் அமுல்படுத்தப்பட்டது
ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழுலாக்டவுன் என்பதால் சனிக்கிழமை மாலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் கூடத் தொடங்கியது
நேற்று மாலை ஆரம்பித்த கூட்டம் விடிய விடிய இறைச்சி கடைகளில் இருந்ததாகவும், மட்டன் மற்றும் சிக்கன் ஆகியவை விடிய விடிய விற்பனை ஆனதாகவும், அதிகாலை 4 மணி வரை இந்த விற்பனை தொடர்ந்து இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் விடிய விடிய வாடிக்கையாளர்கள் இறைச்சி கடைகளில் குவிந்ததால் தனிமனித இடைவெளியும் கடைபிடிக்கப் படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் தான் வைரஸ் பரவல் அதிகமாகிறது என்று கூறப்படும் நிலையில் இறைச்சிக்காக விடிய விடிய மக்கள் போதுமான தனிமனித இடைவெளியின்றி வரிசையில் நின்று மட்டன், சிக்கன் வாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதனால் முழுலாக்டவுன் என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போனதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்
