நேற்று குஷ்புவுக்கு… இன்று குஷ்பு பட நடிகைக்கு…. நாளைக்கு யாரோ? விடாமல் துரத்தும் கொரோனா

நம் இந்தியாவில் கடந்த 10 நாட்களில் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்கம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் தினம்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்படுவதாக பதிவாகிக் கொண்டே வருகிறது.

பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் மத்தியிலும் அதிகமாக கொரோனா  தென்படுகிறது. அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தின் திரைநட்சத்திரங்கள் மத்தியில் அடுத்தடுத்த கொரோனா  பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Keerthi Suresh 1280x720 1

நேற்றைய தினம் கூட பிரபல நடிகை குஷ்புவிற்கு கொரோனா  பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்த சூழலில் குஷ்பூவோடு நடித்த சக நடிகைக்கு என்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடிகை குஷ்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்தா என்ற திரைப்படத்தில் முக்கிய மையமாக கொண்டு கதையை நகர்த்திய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் .அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ட்விட் செய்துள்ளார். லேசான அறிகுறியுடன் கொரோனா பாதிப்பு  உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment