நேற்று கண்; இன்று உயிர்!! ஜல்லிக்கட்டால் அடுத்த உயிரிழப்பு!!

நேற்றைய தினம் தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் அதிதீவிரமாக நடைபெற்றது. அதிலும் குறிப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது நேற்றைய தினம் நடைபெற்றது.

இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. அதே நாளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே காணப்படுகின்ற ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டி என்றால் பரிசுகள் மட்டும் இன்றி காயங்களும், படுகாயங்களும் ஏற்படும். அந்த வகையில் குளித்தலை ஜல்லிக்கட்டு போட்டியில் போட்டியாளர் சிவகுமார் என்ற இளைஞருக்கு மாடு முட்டியதில் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது.

இதனால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சூழலில் அவர் திடீரென்று உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. மாடு முட்டி வலது கண் பார்வை இழந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிவக்குமார் இன்று உயிரிழந்துள்ளார். இது அவர்களின் குடும்பத்தில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.