நேற்று 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்! இன்று அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!!

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி போராட்டம் நடைபெற்றது நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் அமைச்சரவை

இதனால் அவைத்தலைவர் 12 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தார். அவர்கள் குளிர்கால தொடர் முழுவதும் சஸ்பெண்ட் ஆனார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.குறிப்பாக அவர்கள் மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் செய்யும் மசோதாவை நிறைவேற்றும் நிலையிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறியிருந்தார். அதற்கு பதில் தரும் விதமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசை பார்த்து விமர்சனம் செய்திருந்தார்.மத்திய அரசின் அஞ்சுகிறது என்றும் 700 விவசாயிகளின் மரணம் பற்றி நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கவில்லை என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அவை நடவடிக்கைகளை புறக்கணித்தனர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

12 உறுப்பினர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய அவைத்தலைவர் மறுத்ததை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment