Connect with us

அடுத்ததாக மிரட்ட காத்திருக்கும் அருண்விஜய்! யானை திரைப்படத்தின் ட்ரெய்லர்?

அருண்விஜய்

பொழுதுபோக்கு

அடுத்ததாக மிரட்ட காத்திருக்கும் அருண்விஜய்! யானை திரைப்படத்தின் ட்ரெய்லர்?

தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது .ஆயினும் கூட அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் நிலை நிற்க முடியவில்லை.

ஏனென்றால் சினிமாவில் நிலை நிற்க வேண்டும் என்றால் அவர்களின் கடின உழைப்பும் விடா முயற்சி தான் முதன்மையான ஒன்றாக காணப்படுகிறது. எனவே ஒரு சில படங்களுக்கு பின்பு அவர்கள்  மறந்துவிடப்படுகிறார்கள்.

ஆயினும் அதனை அறிந்து தனது விடா முயற்சியையும் உழைப்பையும் முதன்மையாகப் சினிமாவுக்கு கொடுத்து இன்று ஏராளமான நடிகர்கள் தங்களது தகப்பனை விட அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளனர்.

arun vijay

அவர்கள் வரிசையில் காணப்படுபவர் தான் நடிகர் அருண்விஜய். ஆரம்ப காலகட்டத்தில் பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதற்குப் பின்பு ரசிகர்களிடையே மறந்து காணப்பட்ட இவர் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார்.

arun vijay in thalapathy 65

அதன் பின்பு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருண்விஜய் மெல்ல மெல்ல தனக்கென நிரந்தரமான இடத்தை தமிழ் சினிமாவில் பதிய வைத்துவிட்டார். இத்தகைய திறமை வாய்ந்த நடிகர் விஜய் தற்போது யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் ஹரி அவரால் இயக்கப்பட்டு வருகிறது. இதை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

yennai

இந்த நிலையில் யானை திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top