9 மாவட்டங்களுக்கு “மஞ்சள் அலர்ட்”…!! வானிலை மையம் எச்சரிக்கை..!!!

கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்கனவே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி, கோட்டையம், இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

அதே போல் மலப்புரம், கோழிகோடு, வயநாடு, கன்னூர், காசர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றைய தினத்தில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்க கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்திற்கு வலுபெறும் என கூறப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் வடகேரளாவில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வயநாடு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏர்னா குளம், இடுக்கி, பத்தனம் திட்டா போன்ற மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment