Connect with us

மக்களே உஷார்!! 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

Yellow Warning

செய்திகள்

மக்களே உஷார்!! 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top