Connect with us

6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை!!

Yellow Warning

செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை!!

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பெய்த கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பாணாசுர சாகர், கக்கி, பம்பா, செருதோணி அணை, முல்லை பெரியாறு போன்ற முக்கிய அணை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கையானது பாதிக்கப்படுள்ளது.

இந்நிலையில் ஒடிசா கடற்கரை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் படி நாளை வரையில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கன மழையின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடல் பகுதியில் பலத்த காற்று வீசும்.

மேலும், அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top