Connect with us

பெங்களூரில் 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்!! வானிலை மையம் தகவல்!!

Yellow Warning

செய்திகள்

பெங்களூரில் 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்!! வானிலை மையம் தகவல்!!

கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரு நகரின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளி வசித்து வரும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு  பெங்களூரில், மஞ்சள்  அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் படி, பெங்களூரு ரூரல், சிக்கபள்ளாப்பூர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவங்கரே, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் கோலார், ராமநகரா, குடகு, சாமராஜா நகர், மாண்டியா, மைசூர், ஷிமோகா மற்றும் தும்கூர் மாவட்டங்களில் செப்டம்பர் 7-ம் தேதி வரையில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறியுள்ளது. மேலும், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், இன்று காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top