Entertainment
உண்மை தெரியாத யாஷிகா: தோழி இறந்தது தெரியாதா?
நடிகை யாஷிகா சென்ற கார் சமீபத்தில் விபத்துக்குள்ளான நிலையில் இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகை யாஷிகாவும் அவருடைய இரண்டு ஆண் நண்பர்களும் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
யாஷிகாவுக்கு வலது கால் எலும்பு முறிந்து உள்ளதாகவும் இடுப்பு எலும்பு உடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் யாஷிகாவின் உடல்நிலை குறித்து பேட்டி அளித்த அவரது தாயார், யாஷிகாவுக்கு இன்னும் ஒரு சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் எழுந்து நடமாட குறைந்தது 3 மாதம் ஆகும் என்றும் தெரிவித்தார். மேலும் யாஷிகாவின் தோழி பவானி இறந்தது என்று யாஷிகாவுக்கு தெரியாது என்றும் அந்த விஷயத்தை அவரிடம் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியதால் அவருக்கு இன்னும் தெரியாது என்றும் தெரிவித்தார்
இதுகுறித்து யாஷிகா பவானி குறித்து கேட்டபோது பவானி சிகிச்சை பெற்று வருவதாக கூறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே தனது நெருங்கிய தோழி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
