ஆபாச கேள்வி கேட்ட ரசிகருக்கு கூலாக பதில் அளித்த யாஷிகா..!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவங்கள் பதினாறு , இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் கடந்த வருடம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் யாஷிகா . அவரது தோழி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல மாதங்களாக படுத்த படுக்கையிலேயே இருந்த அவர் தற்போது நடக்க தொடங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிகா தனது நேரங்களை ரசிகர்களுக்காக ஒதுக்கி தொடர்ந்து உரையாடி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களை முதன்முதலில் நிர்வாணமாக பார்த்தது யார்?’என்று ஆபாசமாக கேள்வியெழுப்பினார்.
இதற்கு பொறுமையாக பதிலளித்த யாஷிகா ‘டாக்டர் என்று நினைக்கிறேன்’ என கூறியது அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
