Connect with us

சென்னை அப்பல்லோவுக்கு மாற்றப்பட்டார் யாஷிகா ஆனந்த்: இடுப்பு எலும்புகள் முறிந்ததாக தகவல்!

Tamil Nadu

சென்னை அப்பல்லோவுக்கு மாற்றப்பட்டார் யாஷிகா ஆனந்த்: இடுப்பு எலும்புகள் முறிந்ததாக தகவல்!

59d83a695133120be4f428f6ea63250d-1

நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவருடன் சென்ற 2 நண்பர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் அவருடன் சென்ற தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன 

இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மேலும் யாஷிகா ஆனந்துக்கு கை, கால் மற்றும் இடுப்பில் உள்ள எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் தற்போது சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் இருப்பினும் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது

நடிகை யாஷிகா ஆனந்த் விரைவாக குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top