பஞ்சு விலையை காரணம் காட்டி நூல் விலை உயர்வு! உடனடியாக இறக்குமதி வரியை நிறுத்துக;
கடந்த சில மாதங்களாகவே பஞ்சுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நூல் பஞ்சின் விலை அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நூல் விலையை கட்டுப்படுத்த பஞ்சு காண இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் மனு கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியாகியது.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இடம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் மனு அளித்தார். பஞ்சு நூல் விலை உயர்வால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ராஜா சண்முகம் கூறினார்.
நூல் விலை உயர்வால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறது.
கடந்த 18 மாதங்களாக பஞ்சு விலையை காரணம் காட்டி நூல் விலை பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆடை விலையை உயர்த்த முடியவில்லை என்றும் தெரிகிறது.
பஞ்சு விலை கட்டுப்படுத்தினால்தான் நூல் விலை கட்டுக்குள் வரும் என்ன ராஜா சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் 11% வரியை நீக்க ராஜா சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார். தற்போதைய விலையில் 40 லட்சம் பேல்களை உடனே இறக்குமதி செய்து நூல்களுக்கு தந்தால் நூல் விலையை சமாளிக்க முடியும்.
