Connect with us

யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?!

ஆன்மீகம்

யார் இந்த ஆதிசேஷன்?! அவர் விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது எப்படி?!

பாற்கடலில் துயில் கொள்ளும் விஷ்ணுவை தாங்கி படுக்கையாக அறியப்படும் 5 தலையினை கொண்ட நாகத்திற்கு ஆதிசேஷன் என்று பெயர். யார் இந்த ஆதிசேஷன்?! அவர் எப்படி விஷ்ணு துயில் கொள்ளும் படுக்கையானார்ன்னு தெரிஞ்சுக்கலாம்.

காசிப முனிவர்-கத்ரு தம்பதியரின் மகன்தான் இந்த ஆதிசேஷன். . சிவப்பெருமானது கழுத்தில் ஆபரணமாக இருக்கும் வாசுகி பாம்பின் சகோதரன்தான் இந்த ஆதிசேஷன். இதை மறுப்போரும் உண்டு. “கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் முதல் 200 கிலோமீட்டர்கள் வரையிலான ஆழத்தில் கிடக்கும் பாறை ஒன்றை கண்டுப்பிடித்திருக்கின்றனர். இதற்கு, ‘செர்ப்பன் டைல்ராக்ஸ்’ என்று பெயர். இந்த பாறை, பாம்பின் தோல்போல் வழவழப்பான மேற்பரப்பை கொண்டுள்ளதாகவும் 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு அரைவட்ட வடிவில் சுருள்சுருளாக இருப்பதாகவும்,இந்தப் பாறையின் அசைவு காரணமாக பூமிப்பந்தின் மையத்திற்குப் பக்கமாக உள்ள கடினப் பாறைகள் அதிர்ந்து பூகம்பம் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதே கருத்தை ஜெர்மனிய புவியியல் விஞ்ஞானிகளும் ஆமோதிக்கின்றனர்.

dc1000e3dfbf140a08e1578607a19180

‘பாற்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக உள்ள ஆதிசேசன் ஒன்றிற்கு மேற்பட்ட பல தலைகளை கொண்ட இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, அவரது ஒவ்வொரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, அவருக்கு இணையான அவதாரமெடுத்து வந்தவர். உதாரணமாக, விஷ்ணு இராமபிரானாக அவதரித்தபோது, அவருக்குத் தம்பியாக, இலக்குவனாக உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் .

உலகினைக் காக்கும் ஸ்ரீமன் நாராயணனையே தாங்கி நிற்கும் ஆதிசேஷனுக்கும் , வாயுபகவானுக்கும் ஒரு முறை வாக்குவாதம் உண்டானது. வாயுபகவான் மலை, நாடு, நகரத்தை தன் வலிமையால் தூக்கி வீசினார். ஆதிசேஷன் தன் வலிமையால் அவற்றை காத்து நிற்க இப்படியே இருவரும் சம பலம் காட்டி நின்றனர்.   ஒருகட்டத்தில்  வாயுபகவான் பிராணவாயுவை நிறுத்தினார். அதனால், அனைத்து உயிர்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்திரன்  முதலான  தேவர்கள் அனைவரும் ஆதிசேஷனை போட்டியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டி நின்றனர். ஆதிசேஷனும் விலக்கிக்கொள்ள, வாயுபகவான் வெற்றிக்களிப்பில் மலைகளை தூக்கி வீசினான். அதனால் கோபங்கொண்ட சிவன் பேயுரு கொள்ளுமாறு இருவரையும் சபித்தார். இருவரும் மனம் வருந்தி சாப விமோசனம் வேண்டி நிற்க,  வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்யவும், ஆதிசேஷனை  திருப்பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தவம் செய்து சாப விமோசனம் பெற ஆலோசனை கூறினார். அவ்வாறே வாயு பகவான் மதுரைக்கும், ஆதிசேஷன் திருப்பாம்புரத்திற்கும் வந்து பூஜை செய்து சாபம் நீங்கினர்.  

மற்றொரு

முறை சிவனை வினாயகர் வணங்கும்போது தன்னையும் சேர்த்தே வினாயகர் வணங்குவதாக சிவன் உடலில் உள்ள பாம்புகள் கர்வம் கொண்டன. அவற்றின் கர்வத்தினை அடக்கும்பொருட்டு, பாம்பு இனமே இல்லாமல் போகவேண்டுமென சபித்தார். அந்த சாபத்தின் பலனாக பாம்பு இனம் அழிய ஆழம்பித்தது. அவற்றோடு சேர்த்து பூமியை தாங்கும் ஆதிசேஷனும், ராகு-கேது, வாசுகி பாம்பு முதலான தெய்வாம்சம் பொருந்திய நாகங்களும் தங்கள் சக்தியை இழக்க ஆரம்பித்தது. சாபவிமோசனம் வேண்டி சிவனை வேண்டி நின்றது. பூமியில் சேஷபுரி என்னும் இடத்தில் இருக்கும் சிவாலயத்தில் மகாசிவராத்திரி இரவு பூஜித்து வந்தால் சாபம் நீங்கும் என வழி சொன்னார். சிவனின் ஆலோசனைப்படி ஆதிசேஷன் தலைமையில் ராகு-கேது, வாசுகி உள்ளிட்ட நாகர் இனங்கள் சிவராத்திரியின் முதலாம் ஜாமத்தில்  கும்பகோணத்தில் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி சாபவிமோசனம் பெற்று, விஷ்ணு பகவானை தாங்கும் பாக்கியம் பெற்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in ஆன்மீகம்

To Top