படம் வந்து பத்து நாள் கூட ஆகல அதுக்குள்ள வெற்றி விழாவா?

சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் இயக்குனர் ஹரி. ஏனென்றால் அவர் இயக்கத்தில் வந்த அத்தனை படங்களும் நடிகர்களுக்கு சினிமா வாழ்க்கையில் முக்கிய தருணமாக மாறியது.

இந்த நிலையில் இயக்குனர் ஹரி தனது மச்சானை கொண்டு யானை என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் அருண் விஜய் தான். நடிகர் அருண் விஜயின் சினிமா வாழ்க்கையில் என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அதற்கு பின்பு அவரின் சினிமா வாழ்க்கை நன்றாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் யானை திரைப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது வரையும் யானை திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் படக்குழுவினர் தற்போது யானை படத்தின் வெற்றி விழாவினை கொண்டாடி உள்ளனர். அதன்படி இந்த வெற்றி விழாவில் நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி மற்றும் பிரபல நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த போட்டோக்களை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

yanai

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...