தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது .ஆயினும் கூட அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் நிலை நிற்க முடியவில்லை.
ஏனென்றால் சினிமாவில் நிலை நிற்க வேண்டும் என்றால் அவர்களின் கடின உழைப்பும் விடா முயற்சி தான் முதன்மையான ஒன்றாக காணப்படுகிறது. ரசிகர்கள் அவர்களை ஒரு சில படங்களுக்கு பின்பு மறந்துவிடுவார்கள்.
ஆயினும் அதனை அறிந்து தனது விடா முயற்சியையும் உழைப்பையும் முதன்மையாகப் சினிமாவுக்கு கொடுத்து இன்று ஏராளமான நடிகர்கள் தங்களது தகப்பனை விட அதிக அளவு ரசிகர்களை கொண்டுள்ளனர்.
அவர்கள் வரிசையில் காணப்படுபவர் தான் நடிகர் அருண்விஜய். ஆரம்ப காலகட்டத்தில் பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதற்குப் பின்பு ரசிகர்களிடையே மறந்து காணப்பட்ட இவர் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார்.
அதன் பின்பு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருண்விஜய் மெல்ல மெல்ல தனக்கென நிரந்தரமான இடத்தை தமிழ் சினிமாவில் பதிய வைத்துவிட்டார். இத்தகைய திறமை வாய்ந்த நடிகர் விஜய் தற்போது யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் ஹரி அவரால் இயக்கப்பட்டு வருகிறது. இதை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யானை படம் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது விக்ரம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் யானை திரைப்படம் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஜூன் 3ம் தேதி வெளியாகி 9 நாட்களில் சுமார் 300 கோடி வசூலை அள்ளி குவித்திருக்கும் படமாக விக்ரம் உள்ளது.
கமலஹாசனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக விக்ரம் படம் அமைந்துள்ளது. வார நாட்கள், வார இறுதிநாட்கள் என்று தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன. இது அஜீத், விஜய் போன்ற முண்ணனி நடிகர்கள் கூட செய்யாத சாதனையாக உள்ளது. விக்ரமின் மாஸ் வெற்றியால் யானை படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் பல சிக்கல் எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வீட்டுல விசேஷம் படமும் அதே தேதியில் வெளியாவது மற்றொரு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் இவ்வளவு பொருட்செலவில் படம் எடுத்துவிட்டு குறைந்த தியேட்டர்களில் படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த அளவு வசூல் இருக்குமா என்ற கேள்வி படத்தின் விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனால் படத்தின் வெளியீட்டை ஜூலை 1ம் தேதிக்கு மாற்றி வைக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த செய்தி நேற்று பரவிய நிலையில் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 1ம் தேதி படம் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
With all due respect to #Vikram we are postponing our #Yaanai worldwide release to July 1st
Wishing @ikamalhaasan sir @Dir_Lokesh and @RKFI for the record breaking success – Team Yaanai.#YaanaiFromJuly1st@arunvijayno1 #DirectorHari @priya_Bshankar @gvprakash @ZeeTamil pic.twitter.com/87vyF5KuDo— Drumsticks Productions (@DrumsticksProd) June 13, 2022