யானை படத்திற்கு வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழ்சினிமாவில் வாரிசு நடிகராக இருந்து வருபவர் அருண் விஜய். இவர் ஹரி இயக்கத்தில் தற்போது யானை படத்தில் நடித்துள்ளார். ஜூன் 17-ம் தேதி வெளியான இப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

இந்த படம் முழுக்க குடும்ப பாசத்தை சொல்லும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பல கலவையான விமர்சனைங்களை பெற்று வருகிறது. இப்படத்திற்காக அண்மையில் தணிக்கை சான்று வழங்கப்பட்டது.

இந்த சூழலில் மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

குறிப்பாக இயக்குனர் ஹரியின் யானை படத்திற்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கை சான்றை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.

தற்போது வழக்கின் அமர்வு இன்று வந்தது.  அப்போது பேசிய நீதிபதி  வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment