`யாகத்தீயில் தெரிந்த ஆஞ்சநேயர் உருவம்

இறை அதிசயங்களில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றன அப்படி ஒரு அதிசயமாக சிலர் யாகம் செய்யும்போது அவர்கள் எந்த தேவதையை அழைத்து யாகம் செய்கிறார்களோ அந்த தேவதை யாகத்தீயில் எழுந்தருள்வதாகவும் அவ்வப்போது சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும்.

இது புரிந்துகொள்ள முடியாத மர்ம விசயமாகவே இதுவரை இருக்கிறது. பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் பேராசிரியர் பண்டரிநாதன் என்பவர் யாகம் செய்து வருகிறார்.

இவர் யாகம் செய்யும்போது அந்த யாகத்தீயில் வராஹி அம்பாள் எழுந்து நிற்பது போன்ற புகைப்படங்கள் வரும். இவரை பற்றி பல டிவி சேனல்களில்  செய்தி தொகுப்புகள் வந்ததை ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள்.

இது போலவே தற்போது இரண்டு நாட்களுக்கு முன் ஆஞ்சநேயர் ஜெயந்தியின்போது

திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே வளையக்காரன் வலசு என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

அனுமன் ஜெயந்தியை ஒட்டி இந்த கோவிலில் நேற்று சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் வாசனை திரவியங்கள் நெருப்பில் இடப்பட்டன.

அப்போது நெருப்பில் ஆஞ்சநேயர் தெரிந்ததால் இதைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்து பயபக்தியுடன் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ராம பக்தா என கரகோஷம் எழுப்பினர்.

அப்போது இரண்டு குரங்குகள் வந்து அங்கிருந்த பழங்களை எடுத்து சாப்பிட்டதும் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews