மீண்டும் அதிமுகவில் கோஷ்டி மோதல்! எதுவும் சொல்லாத எடப்பாடி!!

நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தனது கருத்தை கூறி இருந்தார். கட்சியில் சசிகலாவை சேர்ப்பது பற்றிய தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறியிருந்தார்.அதிமுக

ஆனால் சசிகலாவுக்கு கட்சியில் இடமில்லை என்று பழனிச்சாமி தெரிவித்த நிலையில் நேற்றைய தினம் பன்னீர்செல்வம் இவ்வாறு கூறியிருந்தார். இதனால் கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. சசிகலாவை கடுமையாக விமர்சித்த பழனிச்சாமியும் மறைமுகமாக கண்டித்து இருந்தார் பன்னீர்செல்வம்.

அவர் கூறிய கருத்துக்கு கே.பி முனுசாமி ஜெயக்குமார் போன்றோர் பதிலளித்தனர். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுகவில் தற்போது கோஷ்டி மோதல் உருவாகி உள்ளதாக காணப்படுகிறது.

பழனிச்சாமி அதன்படி சசிகலா பற்றிய ஓபிஎஸ் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பால் அதிமுகவில் கோஷ்டி மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ஓ பன்னீர்செல்வத்துக்கு  எதிராகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இருதரப்பு சேர்ந்தவர்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வைத்துள்ளனர். பழனிச்சாமி ஆதரவாளர் ஆதிராஜாராம் நேற்று பன்னீரை கண்டித்து பேட்டி அளித்த நிலையில் இன்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் ஓ பன்னீர்செல்வதால் அதிமுகவில் பெரும் மோதல் வெடித்து நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தொடர்ந்து மவுனம் சாதிக்கிறார். பன்னீர்செல்வத்தை விமர்சிக்கும் அதிமுக நிர்வாகிகளும் பழனிசாமி இதுவரை கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment