தற்போது உள்ள காலத்தில் வெள்ளையான நிறம் என்றாலே போதும் நடிகை தரம் என்றும் மதிப்பு என்றும் அனைவரும் எதிர்ப்பு எண்ணியிருந்த நிலையில் கலர் முக்கியமில்லை, அவர்களின் நடிப்பு அவர்களின் திறமை முக்கியம் என்று தற்போது தமிழ் சினிமாவில் தனது நடிப்பையும் திறமையும் நம்பி ரசிகர்கள் கூட்டத்தை தனக்கென்று உருவாகியுள்ளவர் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்ப காலத்தில் துணை நடிகையாக வலம் வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகிகளின் பட்டியலில் இவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியுடன் ரம்மி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை என்ற திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரின் வீட்டிற்கும் தங்கையாக காணப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அழகிய போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த போட்டோவில் அவரது தோற்றமும் அவரது ஸ்டைலும் அனைவரை ஈர்த்துள்ளது. இதனால் அவரது போட்டோவிற்கு லைக் வந்த வண்ணமாக உள்ளது. மேலும் அவரது போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Stay positive better days on their way clicked @jochillz ❤️❤️ pic.twitter.com/FumEPtol7I
— aishwarya rajesh (@aishu_dil) May 5, 2021