Connect with us

கச்சதீவு குத்தகைக்கு விட போறீங்களா !! முழு தகவல் இதோ ..

images 2

Special Articles

கச்சதீவு குத்தகைக்கு விட போறீங்களா !! முழு தகவல் இதோ ..

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 29-ம் தேதி இரவு, இலங்கை சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நான்கு நாள் பயணத்தை முடித்து, நேற்று காலை சென்னை திரும்பினார்.அங்கு, நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் தின விழாவில் பங்கேற்ற அண்ணாமலை, பல்வேறு தமிழ் அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆன்மிக தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

குத்தகை, கச்சத்தீவு, மத்திய அரசு, அண்ணாமலை, இலங்கை,

இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுதும் உள்ள தமிழர்களிடம் பெரும் செல்வாக்கை பெற வேண்டுமானால், கச்சத்தீவை இந்தியா 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற வேண்டும் என இதன்போது அவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் – இலங்கை இடையே கடல் வழி போக்குவரத்தை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் குப்புசாமி அண்ணாமலை ஆலோசனை கூறியதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

விருமன் ஃபர்ஸ்ட் சிங்கள் பற்றி சூர்யா ட்வீட்.. வியப்பில் கார்த்திக்!…

கச்சத்தீவு வரலாறு :

கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795 இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார்.

 

கச்சத்தீவு அமைப்பு :

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். 1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது.

1. ராமேஸ்வரம், 2. குந்துகால், 3. புனவாசல், 4. முயல் தீவு, 5. பூமரிசான் தீவு, 6. முல்லைத் தீவு, 7. மணல் தீவு, 8. வாலித் தீவு (கச்சத் தீவு), 9. அப்பா தீவு, 10. நல்ல தண்ணீர் தீவு, 11 உப்பு தண்ணீர் தீவு, 12 குடுசடி தீவு

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Special Articles

  • 146891 146891

    Special Articles

    பேரறிவாளன் வழக்கு பயணித்த முழு பாதை!!…

    By

    1992ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இரவு பத்து இருபது மணிக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித...

  • c9451dbfda167a6c045322ecee7d8937 c9451dbfda167a6c045322ecee7d8937

    Special Articles

    முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வேண்டுமா? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!

    By

    முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்? மொத்தம் ஜந்து நிலைதான் நீங்கள் விண்ணப்பிக்க…...

  • 70494407 70494407

    Special Articles

    நலங்கு மாவு செய்வது எப்படி? மற்றும் அதன் பயன்கள்..! முழு விபரம்…

    By

    பொதுவாக முகத்திற்கு அதிகம் செயற்கை பொருட்களை பயன்படுத்துதல், காற்று மாசு, துரித உணவு அதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது....

  • kuttys kuttys

    Special Articles

    தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து நமக்கு தெரியாத பல உண்மைகள் !!

    By

    தாய்ப்பாலின் மகத்துவம்   தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் ஏனென்றால் இந்த உலகில் அந்த தாய்ப்பாலுக்கு சரிசமான ஒன்று எதுவுமில்லை பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், பெரும்காரணமாக இருப்பது தாய்ப்பால் ஒன்றே   உலகத்தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டமானது உலகெங்கும் 170க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது.   தாய்ப்பாலின் சத்துக்கள்:   குழந்தை பிரசவமானவுடன் முதல் நாளான்று உருவாகும் சீம்பால் அடர்த்தியான சத்துக்களை கொண்டது அது மட்டுமல்ல பாக்டீரியா வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்கிறது.   தாய்ப்பால் புகட்டுவதால் சேய்க்கு மட்டும் பயன் கிடைப்பதில்லை அது தாய்க்கும் நல்ல பயன் தருகிறது, தாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் தாக்கத்திலிருந்தும் காக்கப்படுகிறது   குழந்தைகளுக்கு கட்டாயம் 6- மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும் அதற்கு பிறகு தான் பிற உணவுகள் சேர்த்து வழங்கப்பட வேண்டும் அதிலும் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது.   இது குழந்தைகளின் சிறுவயதில் ஏற்படக்கூடிய நோய்கள் மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்தும் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. சத்து மிகுந்த தாய்ப்பாலில் உள்ள என்ûஸம்கள்; மற்றும் நோய் எதிர்ப்புச்சத்துக்கள் ஆகியவை குழந்தைகளது மென்மையான உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து பரிபூரண வளர்ச்சியை அளிக்கும் ;  ...

  • blind mexico village blind mexico village

    Special Articles

    கிராமத்தில் யாருக்கும் பார்வை இல்லை… விசித்திர கிராமம்?…

    By

    மெக்ஸிகோவில் அமைந்துள்ள டில்டெபெக் கிராமம் பார்வையற்றோரின் கிராமம் (Village Of Blind People) என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் மனிதர்களளுக்கு மட்டும்...

To Top