தலையை குனிந்து கொண்டால் கேட்காமல் இருப்பேனா? பிக்பாஸ் கமல்ஹாசன்

3f83e75894cd8fe6bc57d2848a36bb8b

நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டால், கேள்வி கேட்காமல் இருப்பேனா என கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் கூறியுள்ளார் 

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய மூன்றாம் புரோமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் ரம்யா, ஷிவானி மற்றும் கேபி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்றும், இருவர் காப்பாற்றப்பட இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவிக்கிறார் 

இதனை அடுத்து இந்த மூவரில் யார் சேவ் செய்யப்படுவார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் என்றும் பிக் பாஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நான்கு ஆண் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்கிறார். அப்போது நான்கு பேருமே அமைதியாக பதில் சொல்லாமல் உள்ளனர்

14c1cdcf2ff7412e43b1e3aface85f1d

இதனை அடுத்து சோம் தலையை குனிந்து கொள்கிறார். தலையை குனிந்து கொண்டால், நான் கேள்வி கேட்காமல் இருப்பேனா, சரி விடுங்கள் சின்னப்பிள்ளை தனமாக இருக்கிறது. நானே யார் வெளியேறுகிற போட்டியாளர் யார் என்பதை சொல்லி விடுகிறேன் என்று கூறி கமல்ஹாசன் அந்த பிக் பாஸ் அட்டையை எடுக்கிறார் 

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி தான் வெளியேற்றப்பட்டார் என்று உறுதி செய்யப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.