இன்று பெளர்ணமி தினம் ஆலயம் செல்ல மறவாதீர்

f262165726ae52fbf0fec0761f550726

இன்று நன்கு நிறைந்த பெளர்ணமி நாள். மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் வரும் நாளே பெளர்ணமி நாளாக வரும். பெளர்ணமி தினத்தில் அந்த முழு நிலவின் ஒளியில் ஆலயங்களுக்கு சென்று வழிபடவேண்டும் என்பது நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் நம்பிக்கை. திருவண்ணாமலை போன்ற இடத்தில் எல்லாம் பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அதிக மக்கள் குவிந்துவருகின்றனர். மலையை சுற்றி 24 மணி நேரமும் சித்தர்கள் வலம் வந்து கொண்டிருப்பதாகவும் இறை நம்பிக்கை உள்ளது.

இதுபோல், சதுரகிரி, திருப்பரங்குன்றம், பழனி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களிலும் கிரிவலம் நடந்து வருகிறது. கிராமங்களில் இருக்கும் பழமையான கோவில்களிலும் இப்போதெல்லாம் பக்தர்கள் ஒரு கமிட்டி போல அமைத்து முக்கிய கோவில் கோபுரத்தோடு சேர்த்து ஊரை சுற்றி வருகின்றனர். இது போல ஆன்மிக ரீதியான விசயங்கள் வலுப்பெற்று வருகின்றன.

அதுபோல் பெளர்ணமியன்று சித்தர்கள் ஜீவசமாதிகளிலும் அதிக அளவு கூட்டம் வருகிறது இது எல்லாம் ஒரு 20 வருடத்துக்கு முன்பு அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். விஞ்ஞானம் மற்றும் இணையம் வளர வளர எங்கே எந்த கோயில் உள்ளது என மக்கள் கூகிள் செய்து தெரிந்து கொண்டு அத்தனைக்கும் பயணிக்கிறார்கள்.

இது எல்லாமே இறை செயல் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று பெளர்ணமி என்பதால் அருகில் சிவாலயத்துக்கோ, முருகன் ஆலயத்துக்கோ, பெருமாள் கோவிலுக்கோ சென்று வாருங்கள்.

வாழ்வில் வளமும் நலமும் பெறுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews