காரிய தடை விலக கற்பக விநாயகரை வணங்குங்கள்

8adeacbb655d85e94acc6ec20a1261d0

ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும் என்ற விநாயகர் பக்தி பாடலை கேட்டு இருப்பீர்கள். ஒன்பது கோள்களையும் தனக்குள்ளே கட்டுப்படுத்தி நமக்கிருக்கும் துன்பங்களை குறைத்து இன்பத்தையும் துன்பத்தையும் சரி சமமாக தருபவர் விநாயகர்.சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்பிக்கை உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் தான் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. நகரத்தார்கள் கோவில் திருப்பணி செய்வதில் வல்லவர்கள் இக்கோவில் நகரத்தார்களின்  கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கோவிலை சுத்தமாக தூய்மையாக பேணுகின்றனர். காரியத்தடைகள் விலக பலரும் இக்கோவில் வந்து செல்கின்றனர்.

தமிழ்நாடு அளவிலும் பல பிரபலங்கள் இக்கோவில் வந்து வணங்கி செல்கின்றனர். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விநாயகர் உதவுவார். அருகம்புல் வாங்கி இந்த விநாயகருக்கு கொடுத்து வணங்கி வந்தால் வாழ்வில் எப்படிப்பட்ட காரியத்தடையையும் நீக்கி விடுவார் விநாயகர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews