ஆவின் பாலில் புழு..? – மத்திய பால் பண்ணை பரபரப்பு விளக்கம்..!!

சென்னை சேத்துப்பட்டில் ஆவின் பாலில் புழு இருந்ததாக வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் மத்திய பால் பண்ணை விளக்கம் கொடுத்துள்ளது.

நேற்றைய தினத்தில் சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த வெண்ணிலா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் வீட்டில் அருகே உள்ள பால் விற்பனை செய்யும் கடையில் இருந்து 4 லிட்டர் பால் வாங்கிதாக குறிப்பிட்டு இருந்தார்.

மீனவர் மீது கதுப்பாக்கிச்சூடு… இந்திய கடற்படை விளக்கம்!!!

அப்போது பால் பாத்திரத்தில் ஊற்றும் போது புழு இருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய பால் பண்ணை சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு புழு குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் வாங்கப்பட்ட பால் பாக்கெட்டின் மேற்பகுதியில் புழு இருந்திருக்கலாம் என விளக்கம் கவனிக்காமல் பாத்திரத்தில் ஊற்றும் போது விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக பால் பண்ணை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

மனைவி பிணத்தோடு இரவு முழுவதும் கணவன் செய்த செயல்!!! உ.பி-யில் பயங்கரம்..!!

அதே மளிகைகடை அருகே காய்கறி மற்றும் பால் டப்புகள் விற்பனை செய்யப்படுவதால் இதன் மூலமாக புழு பரவியிருக்கலாம் என பால் பண்ணை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment