Tamil Nadu
பானிபூரியில் புழு: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
சென்னையை சேர்ந்த வடமாநில இளைஞர் ஒருவர் விற்பனை செய்த பானிபூரியில் புழு இருந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் அந்த இளைஞரை தர்ம அடி கொடுத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையை அடுத்த அம்பத்தூர் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக பானிபூரி விற்பனை செய்து வரும் இளைஞர் ஒருவர் நேற்று வழக்கம்போல் பானிபூரி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் விற்பனை செய்த பானிபூரியில் உள்ள உருளைக்கிழங்குகளில் புழு இருந்ததை பார்த்த வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது கெட்டுப்போன உருளைக்கிழங்கை அவர் பயன்படுத்தி பானி பூரி மசாலா செய்துள்ளார் என்று தெரிந்தது. இதனை அடுத்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் அங்கிருந்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
