சமைத்த சிக்கனில் மிதந்த புழு: வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

தேனி மாவட்டம் பெரியக்குளத்தில் சிக்கன்னில் புழுக்கள் இருந்தால் பரபரப்பு நிலவியது.

தேனி மாவட்டம் பெரியக்குளம் பகுதியில் சுகுனா சிக்கன் என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஆவிஸ்புரன் என்பவர் தன்னுடைய குடும்பத்திற்காக 2 கிலோ சிக்கன் வாங்கி சென்றுள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

இந்நிலையில் காலையில் சமையல் செய்து மதிய உணவிற்காக சாப்பிட தொடங்கி உள்ளனர். இந்த சூழலில் சிக்கன் குழப்பில் புழுக்கள் மிதந்து கிடந்துள்ளால் அதிர்ச்சியடைந்தவர் சம்மந்தப்பட்ட சிக்கன் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது சரியான சிக்கன் கொடுத்தாகவும் கெட்டுப்போவதற்கு நாங்கள் காரணம் கிடையாது என பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மறந்துடாதீங்க! ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு … நாளை கடைசி நாள்!!

வாடிக்கையாளர் கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடையில் வாங்கிய சிக்கனில் புழு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.