
செய்திகள்
அதிர்ச்சி!! உலகிலேயே அதிக வயதான புலி உயிரிழப்பு;;
கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடக்கு வங்காளத்திற்கு ராயல் பெங்கால் டைகர் இனத்தைச் சேர்ந்த புலி ஒன்று 11 வயதில் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக முதலை தாக்கியதால் பின்னங்காலில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த புலிக்கு சிகிச்சை அளித்து நபர்கள் அங்கேயே சுமார் 15 வருடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உலகிலேயே அதிக வயதான புலியாக கருதப்படும் இந்த புலியானது உயிரிழந்து இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் “உலகிலேயே அதிக வயதான புலியான ராஜா உயிரிழந்தது குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். இந்தியாவின் பெருமையாக 25 ஆண்டுகள் வாழ்ந்தது ராஜா. நிச்சயம் ராஜாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாது என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதே போல் வனவிலங்கு ஆர்வலர்கள் புலியின் உடலுக்கு சோசியல் மீடியா பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
