உலகின் முதல் மின்சார பறக்கும் படகு.. கேண்டெலா நிறுவனம் அசத்தல்!

உலகளவில் கச்சாஎண்ணெய் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற காரணமாக முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரானிக்ஸ் கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தினர்.

இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த கேண்டெலா என்ற நிறுவனம், ஹைட்ரோஃபோயில் தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் மின்சார பறக்கும் படகை அறிமுகம் செய்து வைத்திருப்பது அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ரேஷனில் சிறு தானியம், தேங்காய் எண்ணெய்: அமைச்சர் சக்கரபாணி தகவல்!

இந்த படகு 8.5 மீட்டர் மின்சாரத்தில் செயல்படும் என்றும் சுமார் 37 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற படகுகளை விட 80% ஆற்றலை மிச்சப்படுத்துகிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற மின்னணு சாதன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்படகு, தண்ணீரில் சென்றாலும் விமானத்தில் பறக்கும் அனுபவத்தை தரும் என கேண்டெலா நிறுவனம் கூறியுள்ளது.

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு திருவிழா தொடங்கியது!

என்னதான் புது புது எலெக்ட்ரானிக்ஸ் கார், பைக் மற்றும் படகுகள் வந்தாலும் அவற்றின் ஆரம்ப விலை சற்று அதிகமாக தான் இருக்கும் என நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.