மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது..! ஆயுத உதவிகள் வழங்குவதை உடனே நிறுத்துங்க….
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகிறது.
இருப்பினும் உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில் மூன்றாவது உலகப் போர் தொடங்கி விட்டது என ரஷ்யா அதிகாரபூர்வ கூறியிருப்பது உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிபாக உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்காக பிரிட்டன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்ததை தொடர்ந்து ஒரு குண்டுவீச்சின் மூலம் உலக தலைவர்கள் வந்துசெல்வதை ரஷ்யா தடுத்துவிட முடியும் என கூறியுள்ளது.
மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அணு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
