கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அப்ரூவல்? வெளிநாடுகளுக்கு செல்ல சிக்கல் இல்லை!

இந்தியாவில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.இவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசி

இத்தகைய சாதனை இந்தியாவின் பெரும் முயற்சியால் நிகழ்வு என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட இரண்டு விதமான தடுப்பூசிகள் நாடெங்கும் செலுத்தப்படுகிறது.

அவற்றில் பெரும்பாலான மக்களால் ஏற்கப்படுவது கோவிசில்டு ஆகும். இந்த நிலையில் மற்றொரு தடுப்பூசியும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செலுத்தப்படுகிறது. அதற்கு கோவாக்சின் என்று பெயர்.

இதை முதலில் சர்ச்சைக்குரிய தடுப்பூசி ஆக காணப்பட்டது. இதனால் இந்த கோவாக்சின் தடுப்பூசி மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையற்ற தன்மை உருவானது.

இந்நிலையில் இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே ஆராய்ச்சி செய்து,பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவசரகால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கோவாக்சின்  எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் இனி சிக்கல் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment