ப்ளீஸ்.. இனி இது மட்டும் வேண்டாமே.. உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5!

ஒருவர் நம்மிடம் தன் வீட்டை கொடுத்து இங்கு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம். இங்கிருக்கும் பொருட்கள் அனைத்தையும் நீ பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நீ இந்த இடத்தை விட்டு செல்லும் பொழுது இந்த வீடு இப்பொழுது எப்படி இருக்கிறதோ அதே போல் தான் இருக்க வேண்டும் என்று சொன்னால் நாம் அந்த வீட்டை பாதுகாப்போமா? அல்லது அதில் உள்ள தரை, சுவர்களை சேதப்படுத்துதல் அங்கிருக்கும் பொருட்களை உடைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுவோமா? .

நம் பூமியும் அப்படித்தான் இங்கு வாடகைக்குத் தங்குபவர்கள் போல தான் நாம். பூமி நமக்கானது மட்டுமல்ல இங்கு வாழும் பறவைகள், விலங்குகள், மற்ற உயிரினங்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் பொதுவானது.

நாகரீக வளர்ச்சி அதிகரிக்க மனிதன் பூமி தனக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கத் தொடங்கி விட்டான்.

விளைவு நிலம், நீர், காற்று என நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை விஷயங்களும் இன்று மாசுபட்டு‌ விட்டன.

trashcontaminationindustry

இதன் விளைவால் பருவநிலைகளில் நாம் ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம். அளவுக்கு அதிகமான வெப்பம் அளவுக்கு அதிகமான மழை என இயற்கையின் சீற்றங்களுக்கு ஆளாகி வருகிறோம்.

earth

பூமி அதிக அளவு வெப்பமயமாகி ஒருபுறம் பனி கட்டிகள் உருகத் தொடங்கி விட்டன இதனால் கடல் நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் அதிகம்.

drift ice

அகழ்வாரை தாங்கும் நிலம் இனியும் பொறுமையாய் தாங்கும் என்று சொல்ல இயலாது. இனி நாம் ஒவ்வொருவரும் இயற்கையை தாங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமக்கும் நமக்கு அடுத்த தலைமுறையினருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. இனியாவது விழிப்புணர்வுடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்போம்.

இதை அனைவருக்கும்‌ நினைவூட்டும் விதமாக உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்படும் 2023ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் #பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்.

plastic bottles

பிளாஸ்டிக் சுற்று சூழலுக்கு எந்த அளவுக்கு கேடு என்பதை நாம் அறிவோம். பிளாஸ்டிக் பைகள் எத்தனை முறை தடை செய்யப்பட்டாலும் மீண்டும் புழக்கத்துக்கு வந்து விடுகிறது. நம் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் ஒன்றிணைந்து விட்டது. இனி‌‌ முடிந்தவரை பிளாஸ்டிக் மட்டும் வேண்டாம் ‌என ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews