உலகக் கோப்பை கால்பந்து: நாக்-அவுட் சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி

கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் தற்போது நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜெண்டினா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 நாடுகள் தகுதி பெற்றுள்ள நிலையில் தற்போது போர்ச்சுகல் மற்றும் மொரோக்கோ ஆகிய இரண்டு நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

portugul12இன்று அதிகாலை நடைபெற்ற மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளும் தீவிரமாக விளையாடியதால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனை அடுத்து பெனால்டி சூட் முறை பின்பற்றப்பட்டது. இதில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல்கணக்கில் கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது. உலகின் வலிமையான அணிகளில் ஒன்றான ஸ்பெயின் அணி பெனால்டி ஷூட் முறையில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் போர்ச்சுகல் அணி மிக அபாரமாக விளையாடி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு இறுதியில் மோதும் அணிகள் பின்வருவன:

குரோஷியா – பிரேசில்

மொரோக்கோ – போர்ச்சுக்கல்

நெதர்லாந்து – அர்ஜெண்டினா

இங்கிலாந்து – பிரான்ஸ்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...