உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள் எவை எவை?

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது நாக்-அவுட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இதுவரை நடந்த போட்டிகளில் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை இங்கிலாந்து, அர்ஜெண்டினா, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

world cup football 20222 இங்கிலாந்து மற்றும் செனேகல் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3 கோல்கள் போட்டு வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அதேபோல் பிரான்ஸ் அணி போலந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜென்டினா அணிகளிடையே நடந்த போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதேபோல் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

world cup football 20221இந்த நிலையில் இன்று ஜப்பான் மற்றும் குரோசியா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெல்லும் அணி காலிறுதிக்கு தகுதிபெறும். அதேபோல் நாளை ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதிபெறும்.

6 அணிகள் காலிறுதியில் மோதும் நிலையில் அதிலிருந்து நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு அரையிறுதியில் மோதும் என்பதும், அதன் பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி அரையிறுதிப் போட்டி நடைபெறும் என்பதும், டிசம்பர் 17ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.