விறுவிறுப்பான ஆட்டம்.. மெஸ்ஸி-எபாபே அபாரம்: உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் பரபரப்பு தகவல்!

கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா வெற்றி பெறும் என பலர் கணித்திருந்தனர். அந்த வகையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 4 – 2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய நிலையில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா மூன்று கோல்கள் போட்டதால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜென்டினா 2 கோல்கள் போட்டு அசத்தியது என்பதும் ஆனால் பிரான்ஸ் அணியின் எபாபே அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டு தனது அணிக்கு வலு சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

messiஇதனையடுத்து இரு அணிகளும் மீண்டும் தலா ஒரு கோல் போட்டதால் 3 – 3 என்ற நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து பெனால்டி சூட் முறை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபாரமாக வென்றது. அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் இரண்டு கோல்களை தடுத்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அந்த அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று உள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mbappeதோல்வி அடைந்தாலும் பிஆன்ஸ் அணியின் எபாபே மிக அபாரமாக தனது அணிக்கு அடுத்தடுத்து 3 கோல்கள் போட்டு கொடுத்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒரே வீரர் மூன்று கோல்கள் போடுவது இதுவே முதல்முறை என்ற சாதனையை அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற சோகம் அவரது முகத்தில் இருந்தது. இந்த நிலையில் உலக கோப்பை தொடரில் அதிக கோல்கள் போட்ட எபாபேவுக்கு தங்க காலணி விருது அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.