செம்மரக்கடத்தலில் தொழிலாளி உயிரிழப்பு! உடலை தூக்கி சென்றது யார்? தீவிர விசாரணை;

தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு செம்மரக் கடத்தல் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனை அப்போது ஆந்திர போலீசார், தமிழக போலீஸ் செம்மர கடத்தல் வேலையில் ஈடுபடும் நபர்களை கைது செய்கின்றனர்.

செம்மர கடத்தல்

இந்த நிலையில் செம்மரக்கடத்தல் போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்று உயிரிழந்த தொழிலாளியின் உடல் அரூர் சித்தேரி அருகே கண்டெடுப்பு?

தொழிலாளி ராமனா 35 வயது உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் உடலை சித்தேரி மலை கிராமத்திற்கு எடுத்து வந்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடப்பா நல்லமல்லா வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் செம்மரம் வெட்டுவதாக ஆந்திரா வனத்துறைக்கு தகவல் வெளியாகியுள்ளது. வனத்துறையினர் சுற்றி வளைத்த போது தர்மபுரியை சேர்ந்த தொழிலாளி பாறையிலிருந்து தடுமாறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

படுகாயம் அடைந்த தொழிலாளிகள் சந்திரன், வேலு ஆகியோருக்கு கடப்பா ரீம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கமலஹாசன், சுப்பிரமணி, தீர்த்தமலை, முருகன் ஆகியோர் வனத்துறையிடம் பிடிபட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment