வெள்ளி வென்ற வேங்கைக்கு கவர்மெண்ட் வேலை தந்து கௌரவித்தது தமிழக அரசு!

சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டி தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற பதக்கம் வாங்கிய வீரருக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்க உள்ளதாக ஆணை வெளியாகியுள்ளது. மாரியப்பன் தங்கவேல்

அதன்படி ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார் மாரியப்பன் தங்கவேல். இவர் 2020ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமில்லாமல் 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கவேல் மாரியப்பனுக்கு தங்கப்பதக்கம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பதக்கம் நாயகனுக்கு தமிழக அரசு அரசு பணி வழங்கி உள்ளது.

மாரியப்பன் தங்கவேலு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். மாரியப்பன் தங்கவேலு குரூப்-1 பிரிவில் பணி வழங்கி உள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு காகித நிறுவனத்தில் வர்த்தகப் பிரிவில் துணை மேலாளராக மாரியப்பன் தங்கவேலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment