ஒரே ஒரு பேனா; ஆறாம் வகுப்பு மாணவி செய்த வேலை; டாஸ்மாக் கடை குளோஸ்!!

தற்போது தமிழகத்தில் அதிக வருமானம் தரும் தொழிலாக காணப்படுவது மதுபானம் விற்பனை. ஆனால் இந்த மதுபானத்தால் பல குடும்பங்கள் சீரழிகின்றன. ஒரு சில மாவட்டங்களில் மதுபான கடைகள் பள்ளி அருகில் காணப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக காணபடுகிறது.

டாஸ்மார்க்

 

பல பகுதிகளில் மதுபானக்கடைகளை மூடக்கோரி மக்கள் அனைவரும் போராட்டம் மேற்கொள்வர். அதன் விளைவாக ஒரு சில இடங்களில் மதுபானக் கடைகள் மூடப்படும். ஆனால் தற்போது எந்த ஒரு தர்ணா போராட்டம் இல்லாமல் ஒற்றை ஆளாக ஆறாம் வகுப்பு மாணவி மதுபானக்கடையை மூடிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகுந்த காட்டு தீயாக பரவுகிறது.

டாஸ்மாக்

இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுமார்க்கெட் பகுதியில் உள்ள ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார் இளந்தென்றல் என்ற மாணவி.

இவள் அந்தப் பள்ளிக்கு அருகே உள்ள மதுபான கடையை மூட கோரி கடிதம் எழுதி அதை அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். அதனை பார்த்து படித்த அரியலூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக அந்த மதுபான கடையை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

அதனால் அந்த மதுபான கடை அந்தப் பள்ளியின் அருகே இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் தனது ஒற்றை பேனாவால் மதுபான கடையை மூடிய இளந்தென்றல் என்ற மாணவிக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டே உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment