Career
ரூ.25,000 சம்பளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர்(கணக்கு) மற்றும் உதவியாளர்(டிஎம்எஸ்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:
Assistant (Accounts) பிரிவில் 02 பணியிடங்களும், Assistant (DMS) பிரிவில் 01 பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி:
Assistant (Accounts) பணியிடங்களுக்கு வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Assistant (DMS) பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்:
மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் https://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.CMRL-HR-05-2019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2019
