Entertainment
கவின்- சாண்டி மீது பெண் உரிமை இயக்கங்கள் கடும் கண்டனம்!!
விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
சேரனையும், கஸ்தூரியையும் கிண்டல் செய்வதென்றால் கவினுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. வயது வித்தியாசம் பாராமல் கஸ்தூரிய காக்கா என்று அழைப்பது, சேரனை எந்நேரமும் நக்கல் செய்வது என வலம் வருகின்றனர்.

கடந்த வாரம் சாண்டி அண்ட் கோ, ஆணென்னங்க பெண்ணென்னங்கன்னு ஒரு கானா பாடலை எல்லா இடங்களிலும் பாடினர். சேரன், கஸ்தூரி, மதுமிதாவை டார்கெட் செய்ய நினைத்து பாத்ரூம், ஹால், வெளியே புல்வெளி என அனைத்து இடங்களிலும் பாடினர்.
அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டார் லாஸ்லியா, இதனை யாராலும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
இதனால் லாஸ்லியா ஆர்மி உடைந்து லாஸ்லியா கேட்டர்ஸ் என்ற ஆர்மி விறுவிறுவென உருவானது. தற்போது பெண்கள் உரிமை இயக்கங்கள் சார்பில், கவின்- சாண்டி மீது கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட ரீதியாக விஜய் தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பெண்களை இதுபோன்ற கேலி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளனர். கவின் இதனால் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.
