Connect with us

மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்கள்: நிதியமைச்சர் அறிவிப்பு

தமிழகம்

மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதங்கள்: நிதியமைச்சர் அறிவிப்பு

b4fce2779bd54e54039d1e8b0c1dcd23

அரசு பணிகளில் இருக்கும் மகளிர்களுக்கு பேறுகால விடுமுறை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளது அரசு பணியில் இருக்கும் மகளிர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை அரசு பணியில் இருக்கும் மகளிர்களுக்கு 9 மாதங்கள் மட்டுமே பேறுகால விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அரசு பணியில் இருக்கும் மகளிர்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் மகளிர் அரசு பணியில் இருக்கும் மகளிர்களுக்கு கூடுதலாக மூன்று மாதகாலம் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து அரசு பணியில் இருக்கும் பெண்கள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும் பேறுகால இறப்பை குறைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தப்படும் என்றும் அந்த திட்டத்திற்கு ரூபாய் 959 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top