மகளிர் தின ஸ்பெஷல்: 29 பெண்களுக்கு நாரி சக்தி விருது வழங்கினார் ஜனாதிபதி!

இன்றைய தினம் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக மகளிருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று காலத்தை மாற்றி இன்று பல துறைகளில் பெண்கள் முன்னிலையில் வகித்து வருகின்றனர்.

அத்தகைய பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது. நம் இந்தியாவிலும் பெண் மகளிர் தினத்தை ஒட்டி விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாரி சக்தி விருதுகளை வழங்கிக் கொண்டு வருகிறார்.

மகளிர் தினத்தையொட்டி 29 பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சத்தக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக நாரி சக்தி விருது தரப்பட்டது.

தமிழ்நாட்டை சேர்ந்த கைவினைக் கலைஞர் ஜெயா முத்து, தோடா கைபின்னல் கலைஞர் தேஜம்மாவுக்கு நாரி சக்தி விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழகத்தை சேர்ந்த மனநல மருத்துவர் மற்றும் ஆய்வாளரான ரங்கசாமி சக்தி விருது வழங்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment