Connect with us

சரவணன்மேல் கடுப்பான பெண்கள்!

Entertainment

சரவணன்மேல் கடுப்பான பெண்கள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை வழக்கம் போல் இந்த முறையும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் சரவணனும் ஒருவர். 

இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருந்தார். ஆனால், முதல் இரு வாரங்களிலேயே என்னை வெளியில் விடுங்கள். எனக்குப் பதிலாக வேறொருவரை கொண்டு வாருங்கள் என்று கேட்டு கதறினார். அதோடு, தனக்கு இரண்டு திருமணம் நடந்ததாக கூறியதற்கு ஒருபுறம் வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது.

128e93858cee1429b49a7b46c6385dcf

கடந்தவாரம் கமல் ஹாசன் சந்திப்பின்போது, பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் பேருந்தில் வருவதும் உண்டு என்று கமல் ஹாசன் கூற அதனை தனது கையை உயர்த்தி சரவணன் ஆமோதித்தார். 

அதன் பிறகு இதற்கு பதிலளித்த சரவணன் கூறுகையில், நான் கல்லூரி காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார். இதனை சமாளிக்கும் வகையில், பேசிய கமல் ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்றார். 

ஆனால், சரவணன் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாடகி சின்மயி, பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சரவணன் கூறுகிறார். ஆதனால், சரவணன் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top