Connect with us

எப்போது தான் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்? நாளை எதிர்பார்ப்போடு தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்!

ration fund1 1623728250

Tamil Nadu

எப்போது தான் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்? நாளை எதிர்பார்ப்போடு தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்!

எப்போது தான் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்? நாளை எதிர்பார்ப்போடு தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்!

திமுக அளித்திருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவைகளை நிறைவேற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக மகளிருக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமில்லா பயண சேவை பெரும் பயனை அளித்துள்ளதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்றாக காணப்பட்ட மகளிருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இன்றளவும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் நடைபெற உள்ள பட்ஜெட்டை தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top