பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரக் கூடாத பொருட்கள் ? காரணம் என்ன தெரியுமா?

பெண்கள் பொதுவாக பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது இந்த விஷயங்களை பண்ண கூடாது என பல விதி முறைகள் உள்ளது.

1 – ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு விளக்கேற்றி ஒளியை கொடுக்கின்றாள்.

அந்த விளக்கில் ஏற்றப்படும் எண்ணெய் யாரிடம் இருந்தும் பெறக்கூடாது .முக்கியமாக பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரக்கூடாது.

2 – தண்ணீரில் கரையும் உப்பு – துன்பத்தை கரைக்கின்ற உப்பு, மகாலட்சுமியின் அம்சமான உப்பு தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு கொண்டு வருவது நல்லதல்ல.

3 – சீயக்காய் கொண்டு வந்தாலும் உறவு விட்டுப் போகும் . ஆதலால் எண்ணெய் சீயக்காய் , உப்பு இவற்றை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு கொண்டு வராதீர்கள்.

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

எண்ணெய் , உப்பு , சீயக்காய் அப்படியே எடுத்துக் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை வந்தால் ஒரு ரூபாய் நாணயத்தை பெற்றோர்களிடம் கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள்.

அடுத்து பெண்களுக்கு நான் கூறுகின்ற மனதில் பதிய வைக்க வேண்டிய ஒரு முக்கிய பதிவு .

‌புகுந்த வீட்டில்லிருந்து தற்பெருமையை தயவுசெய்துகொண்டு வராதீர் . தன் நலம் கெட்டு , பிறந்த வீட்டையும் கெடுத்து , கணவனின் மனதிலும் காயம் கொடுத்து வாழ்வின் நிம்மதியை குலைத்துவிடும். தலைக்கனமும் தற்ப்பெருமையும் நம் நிலையை தடுமாற செய்யும்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவு பொருள்கள்!

‌புகுந்த வீட்டினை பெருமைப்படுங்கள்.(அதுவே பெற்றவர்களுக்கும் நீங்கள் தரும் மகிழ்ச்சி) குல பெருமையை நிலைநாட்டுங்கள் .நிமிர்ந்து வாழுங்கள் .சிறந்து வாழுங்கள். சிறப்புற வாழ்ந்து சிறந்த குடும்பத் தலைவி என பவனியில் வலம் வாருங்கள் மகிழ்ச்சி பெறுங்கள்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment